லண்டனில் கத்தியால் குத்தப்பட்டு நால்வர் கொலை - ஒருவர் கைது
தெற்கு லண்டனில் உள்ள சவுத்வார்க்கில் நான்கு பேர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டதை அடுத்து, சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பெருநகர பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இன்று அதிகாலை சவுத்வார்க்கில் உள்ள ஒரு குடியிருப்பிற்குள் இருந்து மூன்று பெண்கள் மற்றும் ஒரு ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில், "டெலாஃபோர்ட் வீதி, SE16 இல் உள்ள குடியிருப்பு முகவரியில் மூன்று பெண்கள் மற்றும் ஒரு ஆணின் மரணம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
அத்துடன் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். நேற்றிரவு இடம்பெற்ற சம்பவத்தில் மூன்று பெண்களும் ஒரு ஆணும் கொல்லப்பட்டது தனக்கு மனவேதனை அளிக்கிறது என லண்டன் மேயர் சாதிக் கான் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தில் 60, 40 மற்றும் 30 வயதுக்குட்பட்ட மூன்று பெண்களின் மரணத்தை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். சம்பவம் தொடர்பில் 20 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.



கடலுக்கு அடியில் மிகப்பெரிய ஜாக்பாட்டை கண்டுபிடித்த இந்தியாவின் நட்பு நாடு.., ஆனால் ஒரு சிக்கல் News Lankasri

43 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் அனுஷ்கா.. காதலனை பற்றி முதல் முறையாக கூறிய நடிகை Cineulagam

சீனாவைப் புறக்கணிக்கும் இந்திய மின்னணு உற்பத்தியாளர்கள் - தாய்வான், தென்கொரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் News Lankasri
