4 மாத பயணக்கட்டுப்பாடு அல்லது கடுமையான ஊரடங்கு சட்டம் - பிரதி சுகாதார பணிப்பாளர் எச்சரிக்கை
4 மாதங்களுக்கு பயண கட்டுப்பாடுகளை நீடிப்பது அல்லது கடுமையான ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தி கடுமையான சட்டத்தை செயற்படுத்த நேரிடும் என பிரதி சுகாதார சேவை பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் எச்சரித்துள்ளார்.
பயண கட்டுப்பாடுகளை பொதுமக்கள் புறக்கணித்து செயற்பட்டால் இந்த நிலைமை ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடுமையான சட்டத்திட்டங்களை விதித்து கோவிட்டை கட்டுப்படுத்துவதற்கு முயற்சித்தால், அதனால் ஏற்படும் பொருளாதார பாதிப்பு மிக அதிகம் என அவர் கூறியுள்ளார்.
தொற்றினை கட்டுப்படுத்துவதென்றால் என்றால் அனைவரும் பயணக்கட்டுப்பாடினை உரிய முறையில் பின்பற்ற வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார பாதிப்பை குறைத்து, சீரான முறையில் வைரஸைக் கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதிலும், பாரிய அளவிலான மக்கள் கட்டுப்பாடுகளை புறக்கணித்து செயற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலைமையால் வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு இருந்த காலப்பகுதியை அதிகரித்துள்ளது. வழக்கு தாக்கல் செய்து நீதிமன்றம் சென்று கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாது. மக்களே சரியான முறையில் செயற்பட வேண்டும்.
எதிர்வரும் காலங்களில் நிலைமை தொடர்ந்தால் கடுமையான சட்டத்தின் கீழ் இதனை கட்டுப்படுத்த நேரிடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 21 மணி நேரம் முன்
2025ஆம் ஆண்டு வசூல் சாதனை படைத்த காந்தாரா தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? Cineulagam
7 நாள் முடிவில் மாஸ் கலெக்ஷன் செய்துள்ள ரியோ ராஜின் ஆண்பாவம் பொல்லாதது படம்... இதுவரை எவ்வளவு? Cineulagam
குணசேகரன் போடும் மாஸ்டர் பிளான், ஜனனி சமாளிப்பாரா?... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
H-1B விசா வைத்துள்ளோருக்கு விரைவு பாதையை திறந்த கனடா.,1.7 பில்லியன் டொலர் திட்டம் அறிவிப்பு News Lankasri