காணாமல்போன குடாவெல்ல கடற்றொழிலாளர்கள் 4 பேரும் மீட்பு!
காலி - குடாவெல்ல பகுதியிலிருந்து கடலுக்கு சென்றிருந்த நிலையில், காணாமல்போயிருந்த நான்கு கடற்றொழிலாளர்களும் இன்று(01.11.2026) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
பொத்துவில் கரையில் இருந்து சுமார் 200 கடல் மைல் தொலைவில் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
நான்கு நாள் கடற்றொழில் பயணத்தை மேற்கொண்டு, கடந்த ஒக்டோபர் 21 ஆம் திகதி குடாவெல்ல மீன்பிடித் துறைமுகத்திலிருந்து குறித்த நால்வரும் கடலுக்குச் சென்றிருந்த நிலையில் 'அர்னாப்' சூறாவளி காரணமாக ஏற்பட்ட சீற்றமான கடல் நிலைமை மற்றும் பலத்த காற்று காரணமாக, படகுக்கும் தரைக்குமான அனைத்து தொடர்பாடல் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டிருந்தன.
கூட்டு நடவடிக்கை
படகு பற்றிய தகவல்கள் கிடைக்காத நிலையில், கடற்றொழில் திணைக்களத்தின் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு இது குறித்து அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அமைச்சின் நேரடித் தலையீட்டின் பேரில் இலங்கை கடற்படை, கடலோர காவல் படை மற்றும் அந்தப் பகுதியில் பயணித்த ஏனைய மீன்பிடிப் படகுகளை ஒருங்கிணைத்து விசேட கூட்டுத் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.இந்தக் கூட்டு நடவடிக்கையின் பலனாக, குறித்த படகு கண்டுபிடிக்கப்பட்டது.
படகிலிருந்த நான்கு கடற்றொழிலாளர்களும் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதுடன், தற்போது அவர்களைப் பாதுகாப்பாகக் கரைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான்: அடுத்த 100 நாட்களில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடிவரும்! Manithan
பாக்ஸ் ஆபிஸ்- ஆந்திராவில் முதல் தமிழ் திரைப்படம் செய்துள்ள சாதனை... ரஜினியின் ஜெயிலர் 2 செய்த ஆல்டைம் ரெக்கார்ட் Cineulagam
தமிழ்நாடு, ஆந்திராவில் ரூ. 100 கோடிக்கு மேல் வசூல்... கர்நாடகாவில் ஜெயிலர் 2 எவ்வளவு வசூல் தெரியுமா? Cineulagam
மூன்றல்ல... இரண்டு வாரங்களுக்கான பொருட்களைச் சேமிக்குமாறு பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
ஜேர்மனியில் வன்முறையாக வெடித்த இளைஞர்கள் போராட்டம்... கடைகளைச் சூறையாடிய கலவரக்காரர்கள் News Lankasri