ஐரோப்பாவுக்குள் புலம்பெயர முற்பட்ட நான்கு வெளிநாட்டவர்கள் பலி
ஸ்பெயின் நாட்டின் கடற்கரையில் மொரோக்கோ நாட்டை சேர்ந்த 4 அகதிகளின் சடலம் கண்டுடெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மொரோக்கோ நாட்டில் இருந்து படகுகள் மூலம் 32 அகதிகள் புலம்பெயர முயன்றுள்ள நிலையில் இவர்களில் 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்க கூடும் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இதேபோல், பயணத்தில் தப்பிய புலம்பெயர்ந்தவர்களில் நான்கு பேர் மயக்க நிலையில் காணப்பட்டனர் என்றும் அவர்களில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
மொரோக்கோ மற்றும் அல்ஜீரியாவிலிருந்து படகுகளில் வெளியேறும் அகதிகள் மேற்கு மத்தியதரைக் கடல் வழியாக, ஐரோப்பாவிற்குள் குடியேற முக்கிய நுழைவுப் புள்ளிகளில் ஒன்றாக ஸ்பெயின் நாட்டில் நுழைகின்றனர்.
இதுதொடர்பாக, ஸ்பெயினின் உள்துறை அமைச்சகத்தின் சமீபத்திய புள்ளிவிபரங்களின்படி, ஜனவரி 1 மற்றும் நவம்பர் 15 க்கு இடையில் 13,000 க்கும் அதிகமான புலம்பெயர்ந்தோர் ஸ்பெயின் நிலப்பரப்புக்கு வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 19 மணி நேரம் முன்

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா.. இதோ பாருங்க Cineulagam

வீட்டிற்குள் வந்த பார்கவி, அடுத்த திட்டத்தை போடும் குணசேகரன், என்ன அது.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

8 மடங்கு வேகமாக தாக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை.., இந்தியாவால் பாகிஸ்தான், சீனாவுக்கு சிக்கல் News Lankasri
