இலங்கைக்குள் அத்துமீறி வந்த 4 இந்தியர்கள் விளக்கமறியல்...
இலங்கைக் கடற்பரப்புக்குள் படகு ஒன்றில் எல்லை தாண்டி உட்புகுந்த 4 இந்தியர்களை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இலங்கையின் கட்டுப்பாட்டுப் பகுதியில் நெடுந்தீவுக்கும் கச்சதீவுக்கும் இடையே பயணித்த இந்தியப் படகை நேற்று(05) இரவு வழிமறித்த கடற்படையினர் அதில் பயணித்த 4 இந்தியர்களைக் கைது செய்து நெடுந்தீவுக்கு அழைத்து வந்தனர்.
நீதவான் முன்னிலையில்
மேற்படி 4 இந்தியர்களும் பயணித்த படகில் மீன்பிடி வலைகளோ அல்லது மீனோ காணப்படாதமையால் நெடுந்தீவுப் பொலிஸாரிடம் அவர்கள் ஒப்படைக்கப்பட்டனர்.

நெடுந்தீவுப் பொலிஸாரிடம் ஒப்படக்கப்பட்ட 4 இந்தியர்களையும் ஊர்காவற்றுறை நீதவான் முன்னிலையில் எல்லை தாண்டிய குற்றச்சாட்டின் கீழ் பொலிஸார் இன்று மன்னிலைப்படுத்திய வேளை அவர்கள் நால்வரையும் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிவான் உத்தரவிட்டார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |