யாழ்.வடமராட்சி கட்டைக்காட்டில் நான்கு வீடுகள் மீது தாக்குதல்
யாழ்ப்பாணம்- வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் நபர் ஒருவரால் ஒரே நேரத்தில் நான்கு வீடுகள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
குறித்த சம்பவமானது நேற்றுமுன்தினம்(15.4.2026) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த நபர் வீட்டின் உடமைகள் கண்ணாடி, தளபாடங்களை அடித்து சேதப்படுத்தி உள்ளார்.
முறைப்பாடு
குறித்த நபர் அப்பகுதியில் பல நாட்களாக குடும்பங்களை அச்சுறுத்தி வருவதாகவும் அருகில் வசிக்கும் குடும்பங்களுக்கு பாதுகாப்பில்லாத நிலை தோன்றியுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, தாக்குதல் மேற்கொண்ட நபரை உடனடியாக கைது செய்யுமாறு மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினர் முறைப்பாடு அளித்துள்ளனர்.
புனிதா சீரியலை தொடர்ந்து சன் டிவியில் முடிவுக்கு வரப்போகும் இன்னொரு சீரியல்... வருத்தத்தில் ரசிகர்கள் Cineulagam
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri
பாடகியுடன் சுற்றித்திரியும் கணவர்... பிறந்த நாளில் ஆர்த்தி ரவி உருக்கம்! வைரலாகும் புகைப்படங்கள் Manithan