4 மணி நேர நீர்வெட்டு..! தமிழர் பகுதி மக்களுக்கு வெளியான தகவல்
எல் நினோ காலநிலையினால் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளை(22) முதல் 4 மணி நேரம் நீர் வெட்டு மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனவே மக்கள் நீரை சிக்கனமாக பாவிக்குமாறு தேசிய நீர்வழங்கல் அதிகாரசபை மாவட்ட பிராந்திய முகாமையாளர் எந்திரி எஸ். ஜயந்தன் அறிவித்துள்ளார்.
நீர் வெட்டு
தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியான காலநிலை காரணமாக உன்னிச்சை குளத்தின் நீர்மட்டம் வெகுவாக குறைடைந்து செல்லுகின்றது.

இந்த நிலையில் தொடர்ச்சியாக நீர் வளங்களை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே நாளை முதல் காலை 10.00 மணி தொடக்கம் பிற்பகல் 2.00 மணி வரை நாளாந்தம் நீர் வெட்டை மேற்கொள்ளுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தற்போது உன்னிச்சை குளத்தின் நீர்மட்டம் வரலாற்றில் முதல் தடவையாக 10 அடியாக குறைந்துள்ளதுடன் தற்போது மழை பெய்வதற்கான சாத்திய கூறுகள் இல்லை என வானிலை ஆராய்ச்சி மையம் எதிர்வு கூறியுள்ளது.

28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri
Flydubai தாக்குதல் சம்பவம்... விமானி ஸ்மித் மச்சாரை காப்பாற்றியதை வெளிப்படுத்திய பல் மருத்துவர் News Lankasri