கொழும்பு மாநகரசபை பகுதியில் 4 பில்லியன் ரூபாக்கும் அதிக வரி நிலுவை
கொழும்பு மாநகர சபை பகுதியில் 4 பில்லியன் ரூபாக்கும் அதிகமான மதிப்பீட்டு வரி நிலுவைத் தொகை நிலுவையில் உள்ளதாக கோபா என்ற நாடாளுமன்ற பொதுக்கணக்குகள் குழு தெரிவித்துள்ளது.
மாநகர சபை அதிகாரிகள் சமீபத்தில் குழுவில் முன்னிலையானபோது இந்த விடயம் தெரியவந்துள்ளது. இந்த நிலையில், இந்த வருடத்தில் வரி வசூல் சிறிய முன்னேற்றத்தைக் காட்டியுள்ளது.
கோட்டை பிரிவில் மட்டும் .610 மில்லியன் நிலுவையில், ஜூன் மாதத்திற்குள் 53 மில்லியன் ருபாய் மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளதாக கோபா குழு தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷிம் குறிப்பிட்டுள்ளார்.
சொத்து பறிமுதல் நடவடிக்கைகள்
இதனையடுத்து, வரி செலுத்த தவறியவர்களுக்கு எதிரான சொத்து பறிமுதல் நடவடிக்கைகள் உட்பட, மீட்பு முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக, மாநகர துணை பொருளாலர் நந்தன ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கோட்டைப் பிரிவில் 3,747 தவறிய சொத்துக்களில், இருந்து இதுவரை 148 மில்லியன் ரூபாய் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





இதய நோய் ஆபத்தை தடுக்கணுமா? அப்போ இந்த 3 உணவுகளை சாப்பிடாதீங்க... எச்சரிக்கும் இதய நிபுணர்! Manithan

தர்ஷன் திருமணத்தை முடித்த ஜனனி-சக்தி எடுத்த அடுத்த அதிரடி முடிவு... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam
