44 லட்சம் மாணவர்களுக்கு இந்த மாதம் இலவச சீருடை விநியோகம்
இந்த மாதம் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் 44 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இலவச பாடசாலை சீருடைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்திறன் கல்வி அமைச்சின் திட்டத்தின் கீழ் இந்த சீருடை விநியோகம் மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்த திட்டம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களுடன் மட்டுமின்றி, அரசு அங்கீகாரம் பெற்ற பிரிவெனாக்களில் கல்வி கற்கும் பௌத்த பிக்குகள் மற்றும் சாதாரண மாணவர்களையும் உள்ளடக்கியுள்ளது.

சீனாவின் முழுமையான நன்கொடை மூலம் 11.484 மில்லியன் மீட்டர் சீருடை துணிகள் வழங்கப்பட்டுள்ளன, அனைத்து துணி கையிருப்புகளும் தற்போது துறைமுகத்திற்கு கிடைக்கப் பெற்றுள்ளன.
இந்த நன்கொடை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான நிகழ்வு, எதிர்வரும் 13ம் திகதி கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்திறன் கல்வி அமைச்சரின் தலைமையில் நடைபெறவுள்ளது.
புதிய கல்வி ஆண்டுக்கு முன்னதாக பள்ளிகளுக்கும் மாணவர்களுக்கும் சீருடைகள் கிடைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
வலக் கல்வி காரியாலங்களுக்கு துணிகள் விநியோகம் செய்யும் நடவடிக்கைகள் எதிர்வரும் 19ம் திகதி ஆரம்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.