புதுக்குடியிருப்பில் புதையல் தோண்ட வருகை தந்த மூவர் கைது
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் புதையல் தோண்ட வந்த சந்தேகத்தின் பேரில் மூவரை புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் வைத்து நேற்று இரவு இவர்களை கைது செய்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.
இவர்கள் நீர்கொழும்பு, அனுராதபுரம், பொலனறுவை பகுதிகளை சேர்ந்தவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவர்கள் புதுக்குடியிருப்பு நகர்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடியவேளை கைது செய்யப்பட்டு விசாரித்த போது புதையல் தோண்ட வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.
இவர்களை முல்லைத்தீவு மாவட்ட நீதவான் வாசல் தலத்தில் முன்னிலைப்படுத்தும்
நடவடிக்கையில் புதுக்குடியிருப்பு பொலிஸார் ஈடுபட்டுள்ளார்கள்.



