தியாக தீபம் திலீபனின் 39ஆவது நினைவேந்தல்! யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் பகிரங்க அழைப்பு
தமிழ் மண்ணின் விடுதலைக்காக ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து 12 நாள்கள் அஹிம்சை வழியில் உண்ணாநோன்பிருந்து தன்னுயிரைத் தியாகம் செய்த தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களால் அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
குறித்த அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டமானது நாளை(25) முன்னெடுக்கப்படவுள்ளது.
பகிரங்க அழைப்பு
தியாக தீபம் திலீபனின் 39ஆவது நினைவேந்தல் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக முன்றலில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

தியாக தீபத்தின் நினைவைப் போற்றும் வகையில் இடம்பெறவுள்ள இந்த அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் அனைத்துத் தரப்பினரும் பங்கெடுத்துத் தங்களது முழுமையான ஆதரவை வழங்குமாறு யாழ். பல்கலைக்கழக மாணவர் சமூகம் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளது.
ரஜினி சார் மீது இருக்கும் மரியாதைக்காக ஒதுங்குகிறேன்.. தனுஷ் ஓம் ரிலீஸ் தேதி தள்ளி வைப்பு Cineulagam