பொலிஸ் மோப்ப நாய்களுடன் விசேட சுற்றிவளைப்பு - ஆயிரக்கணக்கானோர் சிக்கினர்
நாடளாவிய ரீதியில் சுமார் 14 ஆயிரம் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பில் வெவ்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய 3 ஆயிரத்து 909 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விடயத்தை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த விசேட சுற்றிவளைப்பில் மதுபானம் அருந்திய நிலையில் 580 பேரும், போதைப்பொருட்களுடன் 1,250 பேரும், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 645 பேரும், குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் தேடப்பட்டு வந்த 98 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் துப்பாக்கியைத் தம்வசம் வைத்திருந்த ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தச் சுற்றிவளைப்புக்கு உதவியாக 55 பொலிஸ் மோப்ப நாய்களும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri