கிளிநொச்சியில் அடையாளம் காணப்பட்டுள்ள 39 டெங்கு நோயாளர்கள்: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கிளிநொச்சி மாவட்டத்தில் 39 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அதிகாரிகள் கருத்து தெரிவித்த போதே இதனைக் கூறியுள்ளனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
மாவட்டத்தில் பெய்து வருகின்ற பருவ மழையைத் தொடர்ந்து மாவட்டத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கரைச்சி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மட்டும் 21 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும் அதிக நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
கோவிட் அறிகுறிகள் சிலவும் டெங்கு நோயுடன்
சம்பந்தப்படுவதால் மக்கள் விழிப்புடன் டெங்கு நோய்க்காவி பரவும் இடங்களை
அழித்து சுகாதார நடைமுறைகளுடன் செயற்படுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
