சுவிட்சர்லாந்தில் உள்ள 36 பில்லியன் டொலர்களை மீட்பதில் இலங்கை தீவிரம்
சுவிட்சர்லாந்தில்(Switzerland) உள்ள 36 பில்லியன் டொலர்களை மீட்பதில் இலங்கை தீவிர முயற்சியில் ஈடுப்பட்டுள்ளதாக பிரித்தானியாவில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் அருஸ் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இங்கு தொடர்ந்தும் இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,
“இலங்கையை(Sri lanka) பொறுத்தவரை தற்போது ஏதோவொரு வகையில் பொருளாதார உதவி தேவைப்படும் நாடாகவே உள்ளது.
இலங்கையில் தற்போது காணப்படும் பொருளாதார தட்டுப்பாடு காரணமாக அரசாங்கத்திற்கு எதிரான எதிர்வலைகள் மேலெழும்பும் என்ற நிலை காணப்படுகின்றது.
அண்மையில் அமெரிக்காவின் USAID நிதியை டொனால்ட் ட்ரம்ப் நிறுத்தியதும் இலங்கையின் பொருளாதாரத்தில் தாக்கம் செலுத்தும். தொடர்ச்சியாகவே இலங்கையின் புறச்சூழல் சாதகமானதாக இல்லை.
மேலும், அண்மையில் சுவிஸ் தூதுவருடன் கறுப்பு பணத்தை எவ்வாறு நாட்டுக்கு கொண்டுவருவது என்று கலந்துரையாடியுள்ளார்கள்.
இலங்கையின் 36 பில்லியன் டொலர்களை சுவிட்சர்லாந்தில் இருப்பதாக கூறப்படுகின்றது. இதனை மீட்பதில் இலங்கை அரசு தீவிரமாகியுள்ளது” என குறிப்பிட்டார்.
இந்த விடயம் தொடர்பில் மேலும் விரிவாக அலசி ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு..
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தங்கம் முதல் வெள்ளி நாணயம் வரை…ஜேர்மனியில் 2000 ஆண்டுகள் பழமையான புதையல் கண்டுபிடிப்பு News Lankasri