கடுமையான பயணக்கட்டுப்பாட்டிற்கு மத்தியில் கொழும்பிற்கு வந்த 360000 வாகனங்கள்
கடுமையான பயணக்கட்டுப்பாட்டிற்கு மத்தியில் ஒரு வார காலப்பகுதியில் கொழும்பிற்கு 360000 வாகனங்கள் வருகைத்தந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அதில் பயணக்கட்டுப்பாட்டை மீறி கொழும்பிற்கு நுழைய முயற்சித்த 15000 வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. அத்துடன் தனிமைப்படுத்தல் பயணத்தடையை மீறிய 8000 வாகனங்களுடன் சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
மேல் மாகாணத்திற்கு நுழையும் மற்றும் வெளியேறும் 14 இடங்களில் வீதி தடை பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், பொலிஸாரினால் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு அத்தியாவசிய வாகனங்கள் மாத்திரமே நுழைய அனுமதிக்கப்படுகின்றது.
கொழும்பிற்கு வரும் வாகனங்களில் அதிகமானவை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் ஊழியர்களினது எனத் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் சுகாதார சேவை, பொலிஸ், முப்படை மற்றும் அரச நிறுவனங்களின் வாகனங்களும் கொழும்பு நகரத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளது.
மேலும் நோயாளி ஒருவரை வைத்தியசாலையில் அனுமதித்தல், நோயாளி ஒருவரை மீண்டும் வீட்டிற்கு அழைத்து செல்வதற்கும், விமான நிலையங்களுக்கு செல்வதற்கும் வாகனங்கள் அதிகமாக கொழும்பிற்கு வருவதாக கூறப்படுகின்றது.
கனடாவை உலுக்கிய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அதிர்ச்சி திருப்பம்: வெளிவரும் புதிய தகவல் News Lankasri
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri