அதிமுக கட்சிக்குள் வெடித்துள்ள பிளவு - முதலமைச்சர் விஜயை அவசரமாக சந்திக்க தயாராகும் உறுப்பினர்கள்
அதிமுகவின் தற்போதைய சரிவு மற்றும் தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி அமைப்பு குறித்து அதிமுக கட்சிக்குள் கடும் பிளவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் காரணமாக உடனடியாக முதலமைச்சர் விஜயை சந்திக்க சில உறுப்பினர்கள் நேரம் கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சி.வி.சண்முகம் தலைமையில் அதிமுகவின் ஒருதரப்பு எம்எல்ஏக்கள் இன்று விஜய்யை சந்திக்க உள்ளதாக கூறப்படுகின்றது.
வெடித்துள்ள பிரச்சினை
எடப்பாடி பழனிசாமியின் பிடிவாத போக்கினால் அதிமுக அதல பாதாளத்திற்கு சென்றுவிட்டதாகவும், இதனால் அதிமுகவின் 28 முதல் 37 எம்.எல்.ஏக்கள் வரை விஜய்க்கு ஆதரவு அளிக்க ரகசியமாக ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இதன் காரணமாக அதிமுகவுக்குள்ளும் சட்டமன்ற உறுப்பினர்களுக்குள் பிரச்சினை வெடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தவெகவில் ஆட்சியில் பங்கு தருவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டதாகவும், அவர்களுடன் சென்று இணைந்து பணிபுரிவோம் என்ற நிலைப்பாட்டில் அதிமுகவில் எம்எல்ஏக்கள், அமைச்சர்களில் ஒரு சாரார் இருந்ததாகவும், மற்றொரு சாரார் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகவும், கூறப்படுகின்றது.
இதன் காரணமாக அதிமுக கட்சிக்குள் கடும் பிளவு ஏற்பட்டுள்ளதாகவும், 36 அதிமுக எம்எல்ஏக்கள் தமிழக வெற்றி கழகத்தின் பக்கம் செல்லவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இன்று இரவு விஜய்யை சி.வி.சண்முகம் தலைமையிலான எம்.எல்.ஏக்கள் தனியார் மண்டபத்தில் விஜய்யை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சூடுபிடித்துள்ள தமிழக அரசியல் களம்..! முதலமைச்சர் விஜய் பதவியேற்றதும் அடுத்தடுத்து பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவுகள்
ஈஸ்வரியை ஜனனிக்கு எதிராக மாற்றும் கதிர், தர்ஷனார் வரப்போகும் பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam