சம்பூர் படுகொலையின் 35வது நினைவுதின நினைவேந்தல்!
சம்பூர் படுகொலையின் 35வது நினைவுதின நினைவேந்தல் நிகழ்வு நேற்று மாலை திங்கட்கிழமை (07) மாலை சம்பூரிலுள்ள நினைவுத் தூபியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
இதன்போது சம்பூர் படுகொலையில் உயிரிழந்தவர்களுக்காக மலர்தூவி,விளக்கேற்றி ஒரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
நினைவேந்தல் நிகழ்வு
நினைவேந்தல் நிகழ்வை பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர்,கிராம மக்கள்,சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.
1990.07.07 அன்று இடம்பெற்ற குறித்த படுகொலை சம்பவத்தில் சம்பூர் பகுதியைச் சேர்ந்த சுமார் 57 பேர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
இதன் நினைவாகவே இன்றையதினம் உயிரிழந்தவர்களுக்கு ஆத்மா சாந்தி வேண்டிய நினைவஞ்சலி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிள்ளையானும் இனியபாரதியும் கிழக்கில் ஏற்படுத்திய இருண்டயுகம்! உயிர்பிழைத்த ஊடகவியலாளரின் வாக்குமூலம்






