மன்னார் மாவட்டத்தில் நேற்று மாலை மேலும் புதிதாக 29 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம்
மன்னார் மாவட்டத்தில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லுகின்ற நிலையில் நேற்று மாலை மேலும் புதிதாக 29 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் இன்று காலை விடுத்துள்ள கோவிட் நிலவர அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும்,
மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் மாலை மேலும் 29 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக வந்த போது மேற்கொள்ள பி.சி.ஆர். பரிசோதனைகளில் 16 தொற்றாளர்களும், சமூகத்தில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனைகளின் போது 13 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் முசலி பிரதேச செயலகத்தில் 4 தொற்றாளர்களும், நானாட்டான் பிரதேச சபையில் 2 தொற்றாளர்களும், விடத்தல் தீவு பிரதேச வைத்தியசாலையில் 2 தொற்றாளர்களும், தலைமன்னார் பிரதேச வைத்தியசாலையில் 2 தொற்றாளர்களும், மன்னார் ஆடைத் தொழிற்சாலையில் 2 தொற்றாளர்களும், முருங்கன் தள வைத்தியசாலையில் ஒரு தொற்றாளரும் இவ்வாறு அன்டிஜன் பரிசோதனை மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இம்மாதம் முதலாம் திகதி முதல் 20ஆம் திகதி வரை 356 கோவிட் தொற்றாளர்களும், இவ்வருடம் மாத்திரம் 1380 தொற்றாளர்களும், மன்னார் மாவட்டத்தில் இதுவரையில் மொத்தமாக 1397 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மாவட்டத்தில் தற்போது வரை 13 கோவிட் மரணங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.





