உயிர் அச்சுறுத்தல்களுக்குள்ளான 350 பேர்.. அதிர்ச்சியளிக்கும் தகவல்கள்!
உயிர் அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டுள்ள 350 பேருக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இவர்களுக்கு, பல்வேறு தரப்பினரால் குறிப்பாக பாதாள குழுக்களின் அச்சுறுத்தல்களக்குள்ளானவர்களே அதிகமாக உள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள்
பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளைப் பாதுகாப்பதற்கான பொலிஸ் பிரிவின்படி, இந்தப் பாதுகாப்பு பல்வேறு நிலைகளில் செயற்படுத்தப்பட்டுள்ளது.

300இற்கும் மேற்பட்டவர்களுக்கு அவ்வப்போது பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பொலிஸார் அவ்வப்போது அவர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களை தினமும் கண்காணித்து வருகின்றனர்.
30இற்கும் மேற்பட்டவர்களுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது, ஒன்று அல்லது இரண்டு பொலிஸ் அதிகாரிகள் தொடர்ந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
30 பேருக்கு பலத்த பாதுகாப்பு
மேலும், கணிசமான எண்ணிக்கையிலானோர் அரசாங்க செலவில் பாதுகாப்பான இல்லங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளைப் பாதுகாப்பதற்கான பொலிஸ் பிரிவு மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளைப் பாதுகாப்பதற்கான தேசிய ஆணைக் குழுவிடமிருந்து தனித்தனியாகப் பெறப்பட்ட "அச்சுறுத்தல் மதிப்பீட்டு அறிக்கைகள்" அடிப்படையில் இந்தப் பாதுகாப்பை வழங்குவதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சர்ச்சைக்குரிய வழக்குகள் உட்பட பல்வேறு நீதிமன்ற நடவடிக்கைகளில் சாட்சியமளிக்கக் கூடாது என்று கடுமையான அழுத்தத்திற்கு உள்ளான சாட்சிகளுக்கு பாரிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
குழந்தைகளை ஆயுதமாக பயன்படுத்துகிறார் உள்துறைச் செயலர்: லேபர் கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு News Lankasri