முல்லைத்தீவில் 35 இலட்சம் பெறுமதியான போலி முத்துக்களை விற்ற சந்தேகநபர் கைது (Photo)
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மூங்கிலாறு பகுதியினை சேர்ந்த ஒருவருக்கு வெலிஓயா பகுதியில் வசிக்கும் ஒருவர் சுமார் 35 இலட்சம் பெறுமதியான போலி தங்க முத்துக்களை விற்று ஏமாற்றிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
வெலிஓயா பகுதியினை சேர்ந்த 52 வயதுடைய நபர் கடந்த மாதம் (21.03.2023) திகதியன்று முல்லைத்தீவு பகுதியில் போலி தங்க முத்துக்களை விற்பனை செய்ய முற்பட்டபோது கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவரிடம் 35 இலட்சத்தி 25 ஆயிரம் ரூபா பணத்தினை கொடுத்து 1470 போலி தங்க முத்துக்களை வாங்கி ஏமாற்றமடைந்த மூங்கிலாறு பகுதியினை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் (22.03.2023) திகதியன்று புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கடந்த (24.03.2023) திகதியன்று நீதிமன்றில் மீண்டும் விசாரிக்கப்பட்டு அவரை எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது.
குறித்த தொகை பணம் மீட்பு
இதன்போது நீதிமன்ற உத்தரவிற்கு அமைய புதுக்குடியிருப்பு பிரதேச குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் வவுனியா சிறைச்சாலைக்கு சென்று குறித்த சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் மூங்கிலாற்று பகுதியில் 35 இலட்சம் வரையான பணத்தினை வாங்கியமை தெரியவந்துள்ளது.

தொடர்ந்து நேற்று (06.04.2023) சந்தேகநபரை அவரின் வாழ்விடத்திற்கு அழைத்து சென்று 18 இலட்சத்தி 30 ஆயிரம் ரூபா பணத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட
பணம் நீதிமன்றில் ஒப்படைக்கும் நடவடிக்கையும் வழக்கு தொடர்பான
விசாரணையினையும் புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பிரித்தானியாவை நெருக்கும் ஆறாவது வெப்ப அலை... 14 லட்சம் மக்களுக்கு குழாய் நீர் பயன்பாட்டுத் தடை News Lankasri
ஓமான் குறுக்கிட்டால் மொத்தமாக அழிப்போம்... ஈரான் போர் தொடர்பில் ட்ரம்ப் பகிரங்க மிரட்டல் News Lankasri