சீமெந்து இறக்குமதியை நிறுத்திய 35 நிறுவனங்கள்
இலங்கைக்கு சீமெந்து இறக்குமதி செய்து வந்த சுமார் 35 நிறுவனங்கள், சீமெந்து இறக்குமதியை இடைநிறுத்தியுள்ளன. நாட்டில் ஏற்பட்டுள்ள அமெரிக்க டொலர் தட்டுப்பாடு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வீடமைப்பு அமைச்சில் நடந்த பேச்சுவார்த்தையில் தெரியவந்துள்ளது.
இலங்கைக்கு மாதம் ஒன்றுக்கு ஆறு லட்சம் சீமெந்து பொதிகள் தேவைப்படுகிறது. தேசிய ரீதியாக நான்கு லட்சம் சீமெந்து பொதிகள் பெற்றுக்கொள்ளப்படுகின்றன.
தேவையான மீதமுள்ள இரண்டு லட்சம் சீமெந்து பொதிகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய நேரிட்டுள்ளது.
எனினும் நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் தட்டுப்பாடு காரணமாக இந்த தொகையை இறக்குமதி செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் சீமெந்து பொதி ஒன்றின் விலை ஆயிரத்து 475 ரூபாய் என அறிவிக்கப்பட்டிருந்தாலும் வர்த்தக சந்தையில் அதனை சுமார் இரண்டாயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்து வருகின்றன.





உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri
