யாழ். போதனா வைத்தியசாலையில் படுகொலை செய்யப்பட்டோரின் நினைவு தினம் அனுஸ்டிப்பு
யாழ். போதனா வைத்தியசாலையில் கடமையில் இருந்த 21 பேர் சுட்டு படுகொலை செய்யப்பட்டிருந்ததன் 34ம் ஆண்டு நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நினைவு தினமானது யாழ். போதனா வைத்தியசாலை ஊழியர்களின் ஏற்பாட்டில் இன்றைய தினம் நடத்தப்பட்டுள்ளது.
1987ம் ஆண்டு யாழ். போதனா வைத்தியசாலைக்குள் நுழைந்த இந்திய இராணுவத்தினரால் வைத்தியசாலையில் கடமையிலிருந்த 21 பேர் சுட்டு படுகொலை செய்யப்பட்டனர்.
இந்திய இராணுவத்தினரால் சுட்டு படுகொலை செய்யப்பட்டோரின் நினைவாக, உயிரிழந்தோரின் உறவுகளால் பொது சுடர் ஏற்றப்பட்டு படுகொலை செய்யப்பட்டோரின் திருவுருவப் படங்களுக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
சுகாதார நடைமுறைகளை பேணி இடம்பெற்ற குறித்த நிகழ்வில் யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர், பிரதிப் பணிப்பாளர், வைத்தியசாலை ஊழியர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

உரிமைகளுக்காக மீண்டும் மீண்டும் போராடும் ஈழத்தமிழர்களின் நிலை.. 11 மணி நேரம் முன்
ஜனநாயகன் படத்தின் பட்ஜெட் மற்றும் பிசினஸ் ரிப்போர்ட்.. ரிலீஸுக்கு முன் இவ்வளவு கோடி லாபமா Cineulagam
சரிகமப சீசன் 5 புகழ் பவித்ராவுக்கு அடித்த லக்... யாருடைய இசையமைப்பில் பாடுகிறார் தெரியுமா? Cineulagam
தொடக்க வீரராக 8, பந்துவீச்சில் 54 ஓட்டங்கள் கொடுத்த அர்ஜுன் டெண்டுல்கர்: நொறுக்கிய ஆஞ்சநேயா News Lankasri