மொனராகலை பேருந்து விபத்தில் மாணவர்கள் உட்பட 34 பேர் படுகாயம்
மொனராகலை - சியம்பலாண்டுவ புத்தமபகுதியில் இருந்து மொனராகலை நோக்கி பிரயாணித்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியது.
குறித்த சம்பவம் இன்று (29.02.2024) காலை 7.10 மணியளவில் இடம்பெற்றது.
பேருந்து வீதியில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் மாணவர்கள் உட்பட 34 பேர் காயமடைந்த நிலையில் சியம்பலாண்டுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணை
இந்நிலையில், மொனராகலை நோக்கி பிரயாணித்த குறித்த பேருந்தில் சுமார் 45 பாடசாலை மாணவர்கள் உட்பட 80 பேர் பயணித்துள்ள நிலையில் வேகக்கட்டுப்பாட்டை மீறி வீதியில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
மேலும், இதில் பாடசாலை மாணவர்கள் உட்பட 34 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இது தொடர்பாக சியம்பலாண்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri
டாப் 5-வில் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டும் சன் டிவி.. சீரியல் TRP விவரங்கள் Cineulagam
என்னது, இவருக்கு இரண்டாம் திருமணமா.. பிரச்சனையில் சிக்கிக்கொண்ட சோழன்! அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam