இலங்கையில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த பங்களாதேஷ் பிரஜைகள் 34 பேர் கைது
விசா காலாவதியாகி இலங்கையில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 34 பங்களாதேஷ் பிரஜைகள் நேற்று சீதுவை பகுதியில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்த போது குடிவரவு மற்றும் குடியகல்வுத்துறையின் சிறப்பு புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குடிவரவு மற்றும் குடியகல்வுத்துறை அதிகாரிகளுக்குக் கிடைத்த பல புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர்கள்
இவர்கள் 19 முதல் 54 வயதுக்குட்பட்ட ஆண்களாவர்.
கைது செய்யப்பட்டவர்கள் வெலிசறை குடிவரவு மற்றும் குடியகல்வுத்துறையின் தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
மேற்படி பங்களாதேஷ் பிரஜைகளை விரைவில் அவர்களது நாட்டுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கை எடுத்து வருவதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam

மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan

சீன போர்விமானங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவின் ரஃபேல் ஜெட்களை வீழ்த்தியது: அமெரிக்க வட்டாரம் உறுதி News Lankasri
