3300 பேருக்கு இன்று கோவிட் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டது - வைத்தியர் கே.கிரிசுதன்
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 3300பேருக்கு இன்றைய தினம் கோவிட் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கே.கிரிசுதன் தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் இன்றைய தினம் கோவிட் தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையிலும் இன்றைய தினம் பெருமளவான மக்கள் ஆர்வத்துடன் வருகைதந்து தங்களுக்கான தடுப்பூசிகளைப் பெற்றுச்செல்வதைக் காணமுடிந்தது.
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட மஞ்சந்தொடுவாய், நாவற்குடா, கல்லடி, கூழாவடி,சேற்றுக்குடா ஆகிய பகுதிகளில் உள்ள 30வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கான இரண்டாம் கட்ட தடுப்பூசிகள் ஏற்றப்பட்டன.
இன்றைய தினம் 30வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கான இரண்டாம் கட்ட தடுப்பூசிகள் ஏற்றப்பட்ட அதேநேரம் இதுவரையில் எந்த தடுப்பூசிகளையும் பெற்றுக் கொள்ளாதவர்களுக்குத் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டன.
இதுவரையில் எந்தவித தடுப்பூசிகளையும் பெற்றுக்கொள்ளாத 30வயதுக்கு மேற்பட்ட அனைவரையும் தங்களுக்குரிய தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளுமாறும் அவர் தெரிவித்துள்ளார்.











ஒரு நாள் கூத்து காட்டும் போட்டியாளர்.. இதுக்கு மேல தாங்கமாட்டாரு- திவாகரனை ஓரங்கட்டிய பிரபலம் Manithan
