முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக 33 கோடி ரூபாய் செலவு
தற்போது நாடாளுமன்றத்தில் இருந்து ஓய்வு பெற்ற மற்றும் உயிரிழந்த உறுப்பினர்களின் உறவினர்களுக்காக 33 கோடி ரூபாய் செலவிடப்படுவதாக தெரியவந்துள்ளது.
அதற்கமைய, 424 பேருக்கான ஓய்வூதியம் செலுத்துவதற்காக இந்த வருடத்திற்கான வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கையில் சமீபத்தில் கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினர்கள் இணைக்கப்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது.
ஓய்வூதிய கொடுப்பனவு
நாடாளுமன்றத்தில் இருந்து பெறப்பட்ட சமீபத்திய அறிக்கைகளின்படி, குறைந்தபட்சம் 5 வருட சேவையை பூர்த்தி செய்த ஒரு உறுப்பினருக்கு அனைத்து கொடுப்பனவுகளுடன் மாதம் 57,620 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும்.
நாடாளுமன்றத்தில் 15 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் இருந்த உறுப்பினருக்கு அனைத்து கொடுப்பனவுகளுடன் வழங்கப்படும் மாதாந்த ஓய்வூதியம் 75,715 ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan
