327 இலங்கை தமிழர்களுக்கு அரசியல் தஞ்சம் வழங்கிய சுவிஸ்
சுவிட்ஸர்லாந்து அரசு, இலங்கை தமிழர்கள் 327 பேருக்கு அரசியல் தஞ்சம் வழங்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை பாதுகாப்பு பிரிவு, பயங்கரவாத தடுப்பு பிரிவு மற்றும் பொலிஸாரினால் மரண அச்சுறுத்தல் மற்றும் சித்திரவதைகள் மேற்கொள்ளப்படுவதாக சுவிஸ் அரசாங்கத்திடம், குறித்த இலங்கையர்கள் முறைப்பாடு செய்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசியல் தஞ்சம் பெற்ற நபர்கள் யார் என சுவிஸ் அரசாங்கம் இதுவரையில் தகவல் வெளியிடவில்லை. எனினும் 17 இலங்கையர்களுக்கு அரசியல் தஞ்சம் வழங்க சுவிஸ் அரசாங்கம் நிராகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த இலங்கையர்கள் முன்வைத்த முறைப்பாடு தொடர்பில் சுவிஸ் குடிவரவு திணைக்களம், இலங்கை அரசாங்கத்திடம் வினவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சூரிச் நகரத்தில் மொழி மாற்றம் செய்யும் ஒருவரால் இந்த நபர்களுக்கு அரசியல் தஞ்சம் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
குறித்த நபரால் அதற்கான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதென குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.