நாட்டுக்கு வர முடியாமல் வெளிநாட்டில் தவித்த 31 இலங்கையர்கள்
இலங்கைக்கு வர வீசா இன்றி குவைத்தில் நீண்ட காலமாக தங்கியிருந்த 31 பேர் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
குவைத்தில் உள்ள இலங்கை தூதரகத்தின் தலையீட்டில் தயாரிக்கப்பட்ட தற்காலிக விமான அனுமதி பத்திரத்தின் கீழ் இவர்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் குழுவினர் இன்று காலை 06.16 மணியளவில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் UL-230 விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
வீட்டுப் பணியாளர்கள்
வீட்டு பணிக்காக சென்ற 28 பெண்களும் மூன்று ஆண்களும் இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, கடந்த 12ஆம் திகதி வீசா இன்றி குவைத்தில் தங்கியிருந்த 33 இலங்கை வீட்டுப் பணியாளர்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இலங்கை தூதரகம்
குவைத்தில் உள்ள இலங்கை தூதரகத்தில் சுமார் 2,000 பேர் இலங்கைக்கு வருவதற்கு பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் எதிர்காலத்தில் குழுக்களாக இலங்கைக்கு அனுப்பப்படுவார்கள் என தூதரகத்தின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
வெளியில் சாப்பிட நீ எதுக்கு இருக்க, மீனாவிடம் செந்தில் கேட்ட கேள்வி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam