பிள்ளைகளை பாடசாலையில் சேர்ப்பதில் வீழ்ச்சி
பிள்ளைகளை பாடசாலைக்கு சேர்ப்பதில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக பிரதிக் கல்வி அமைச்சர் டொக்டர் மதுர செனவிரட்ன தெரிவித்துள்ளார்.
தரம் ஒன்றுக்கான மாணவர் சேர்க்க எண்ணிக்கை 40000த்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வருடாந்த குழந்தை பிறப்பு வீதம் குறைவடைந்துள்ள காரணத்தினால் இவ்வாறு மாணவர்கள் சேர்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பொதுவாக ஒவ்வொரு ஆண்டிலும் சுமார் மூன்று லட்சம் மாணவ மாணவியர் தரம் ஒன்றுக்காக சேர்ப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாடு முழுவதிலும் 309 ஆரம்பப் பிரிவு பாடசாலைகளை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதில் 31 பாடசாலைகள் இந்த ஆண்டில் ஆரம்பிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இந்த புதிய பாடசாலைகளில் நவீன கழிப்பறை வசதிகள் வழங்கப்படும் எனவும் ஓரே அமைப்பில் பாடசாலைகள் நிறுவப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையிலும் சில மாற்றங்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக பிரதி அமைச்சர் மதுர செனவிரட்ன தெரிவித்துள்ளார்.