கொங்கோவில் எபோலா வைரஸ் தொற்றினால் 3,000க்கும் அதிகமானோர் உயிரிழப்பு
கொங்கோ ஜனநாயகக் குடியரசில் தீவிரமடைந்து வரும் எபோலா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,000 ஐக் கடந்துள்ளதாக அந்த நாட்டு அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
அந்த நாட்டின் வடகிழக்கு மாகாணங்களில் அதிவேகமாகப் பரவி வரும் இந்த எபோலா தொற்று, கொங்கோ வரலாற்றில் பதிவான மிக மோசமான நோய்த்தொற்று பேரழிவாக மாறியுள்ளது.
எபோலா வைரஸ் தொற்று
அரசாங்கத்தின் புள்ளிவிவரங்களின்படி, இதுவரை 6,186 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,007 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த மே மாதம் இதுரி(Ituri) மாகாணத்தில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட இந்தத் தொற்று, தற்போது நாட்டின் ஆறு மாகாணங்களுக்குப் பரவியுள்ளது.

'பண்டிபுக்யோ' (Bundibugyo) எனப்படும் இந்த எபோலா வகைக்கு இதுவரை அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளோ அல்லது சிகிச்சைகளோ கண்டுபிடிக்கப்படவில்லை என்பது சுகாதாரத் துறையினருக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது.
சுகாதாரப் பணியாளர்களின் பற்றாக்குறை, போதிய பாதுகாப்பின்மை மற்றும் கிராமப்புற மக்களின் ஒத்துழைப்பின்மை காரணமாகவே இந்தத் தொற்றைக் கட்டுப்படுத்துவதில் சிக்கல் நிலவுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், எபோலாவினால் உயிரிழப்பவர்களில் சுமார் 60 சதவீதமானோர் வைத்தியசாலைகளுக்கு வெளியே மரணிப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தினமும் அநுர அரசாங்கத்தின் நிலைப்பாடும்..! 10 மணி நேரம் முன்
19 நாட்களை கடந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் விஸ்வநாத் & சன்ஸ்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம் Cineulagam