மருந்தக பணியாளர் வீட்டில் 3000 போதை மாத்திரை - சோதனையில் சிக்கிய லட்சக்கணக்கான பணம்
சுமார் 3,000 போதை மாத்திரைகள் மற்றும் 1,25,000 ரொக்கப் பணத்துடன் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கை நேற்று(05.06.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
3000 போதைப் மாத்திரைகள் மீட்பு
ஒரு வீட்டில் சட்டவிரோத மருந்துப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், காலி பொலிசாரின் ஊழல் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் இந்தக் கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது, மாத்திரைகளும், ரொக்கப் பணமும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
விசாரணையில், சந்தேக நபர் ஒரு தனியார் மருந்தகத்தில் பணிபுரியும் ஒருவர் என்பது தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் இன்று(06.06.2026) காலி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
காலி பொலிஸாரின் ஊழல் தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
