சர்வதேச கடற்பரப்பில் சிக்கிய 303 பேர்! இலங்கை கடற்படையினரை தொடர்பு கொண்டது ஏன்? (VIDEO)
சர்வதேச கடற்பரப்பில் சிக்கிய 303 பேர் நீர்கொழும்பு விமான நிலையத்தில் இறக்கப்பட்டு நீர்கொழும்பு சிறைச்சாலையில் அடைக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகவுள்ளதாக இலங்கையில் இருக்கும் புலனாய்வுச் செய்தியாளரும், அரசியல் ஆய்வாளருமான எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சர்வதேச கடற்பரப்பில் சிக்கிய 303 பேர் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
சிங்கப்பூருக்கு அருகிலுள்ள சர்வதேச கடற்பரப்பில் தத்தளித்த கப்பலில் இருந்து 303 இலங்கையர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
இந்த கப்பலில் இருந்தவர்கள் தற்போது ஜப்பானிய கப்பல் மூலம் வியட்நாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், இவர்கள் இலங்கையின் குடிவரவு,குடியகல்வு சட்டத்தின் மூலம் மீண்டும் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டு 14 நாட்கள் அல்லது ஒரு மாத காலப்பகுதியில் சிறை வைக்கப்பட்டு 2 பிணை அடிப்படையில் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சட்டவிரோதமான முறையில் சென்றவர்களில் ஒருவர் அங்கிருந்து இலங்கையின் கடற்படை அதிகாரிக்கு அழைப்பினை ஏற்படுத்தி தகவல் வழங்கியுள்ளார்.
எனவே இந்த சட்டவிரோத பயணத்தில் பண பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டு இலங்கையின் கடற்படை அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

பாரதி கண்ணம்மா, கல்யாணம் முதல் காதல் வரை குழந்தை நட்சத்திரங்களை நியாபகம் இருக்கா?... எப்படி உள்ளார்கள் பாருங்க, வீடியோ Cineulagam
