சர்வதேச கடற்பரப்பில் படகில் தத்தளித்த 300 இலங்கையர்கள்! ஐ.நாவிடம் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்
நடுக்கடலில் மீட்கப்பட்டு வியட்நாமில் தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கை புலம்பெயர்ந்தோர் நாடு திரும்ப மறுப்பு தெரிவித்துள்ளதுடன்,ஐக்கிய நாடுகளின் உயர் ஸ்தானிகராலயத்திடம் முக்கிய வேண்டுகோளொன்றினை விடுத்துள்ளனர்.
ஸ்ப்ராட்லி தீவுகளுக்கு அப்பால் கடலில் மீன்பிடிக்கப்பல் சேதமடைந்து தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட 300-க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் சொந்த நாட்டிற்கு திரும்ப மறுப்பு தெரிவித்துள்ளதுடன், மாறாக, அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஸ்தானிகராலயத்திடம் தாங்கள் வெளிநாட்டில் குடியேற உதவுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பிலிப்பைன்ஸுக்கும் வியட்நாமிற்கும் இடையிலான கடற்பரப்பில் சுமார் 303 பேரை ஏற்றிச் சென்ற கப்பல் தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சு இலங்கை கடற்படைக்கு அறிவித்திருந்தது.
சர்வதேச கடற்பரப்பில் மீட்கப்பட்ட 303 இலங்கையர்கள்
இதன்போது படகை தொடர்பு கொண்ட இலங்கை கடற்படையினர், படகை இயக்கிய குழுவினர் அதில் இருந்த பயணிகளுடன் படகை கைவிட்டுவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து இலங்கை கடற்படை மற்றும் பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் மற்றும் வியட்நாமில் உள்ள இலங்கை தூதரகங்கள் மற்றும் சிங்கப்பூரை தளமாகக் கொண்ட பிராந்திய கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையங்கள் (MRCC) இணைந்து மீட்புப் பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டதாக இலங்கை வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
அதைத் தொடர்ந்து, ஜப்பானின் Helios Leader என்ற கப்பலைத் தொடர்பு கொண்டு, கடலில் மூழ்கிக்கொண்டிருந்த படகிலிருந்து அனைவரையும் மீட்டனர். பின்னர், அவர்கள் அனைவரும் தெற்கு வியட்நாமில் உள்ள Vung Tau துறைமுகத்தில் வியட்நாம் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இலங்கையர்கள் அனைவரும் ஹோசிமின் நகரில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இப்போது Vung Tau நகரம் மற்றும் Dat Do மற்றும் Xuyen Moc மாவட்டங்களில் தங்கியுள்ளனர்.
இவர்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்பிவைக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், தங்களுக்கு சொந்த நாட்டிற்கு திரும்பிச்செல்ல விருப்பமில்லை எனவும், வெளிநாட்டில் புலப்பெயர உதவுமாறு ஐக்கிய நாடுகளின் உயர் ஸ்தானிகராலயத்திடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

பாரதி கண்ணம்மா, கல்யாணம் முதல் காதல் வரை குழந்தை நட்சத்திரங்களை நியாபகம் இருக்கா?... எப்படி உள்ளார்கள் பாருங்க, வீடியோ Cineulagam

பல சர்ச்சைகளை கடந்து குடும்பத்துடன் நடிகர் ஸ்ரீகாந்த் எங்கு சென்றுள்ளார் தெரியுமா... போட்டோ இதோ Cineulagam
