அமைச்சர் பவித்ராவினால் 300 பேருக்கு ஏற்பட்டுள்ள நிலை
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வரும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியுடன், சுமார் 300 பேர் வரை நெருக்கமாக செயற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கடந்த சில தினங்களாக பல்வேறு கலந்துரையாடல்களில் அமைச்சர் பங்கேற்றிருந்தமையே இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சின் செயலாளர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலரும் அமைச்சருடனான கலந்துரையாடல்களில் பங்கேற்றுள்ளனர்.
எனவே, தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை சுய தனிமையில் ஈடுபடுமாறு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கோரியுள்ளார்.
அமைச்சரின் கணவர் மற்றும் மகள் ஆகியோருக்கு முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனை மூலம் அவர்களுக்கு தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது.
பிரித்தானியாவில் ஆண்டுக்கு 1 மில்லியன் பவுண்டுகள் சம்பாதிக்கும் ஒருவர் எவ்வளவு வரி செலுத்த வேண்டும்? News Lankasri
ட்ரம்பின் போர் அச்சுறுத்தல் ஒரு பக்கம்... ரஷ்யாவுடன் ரகசிய ஒப்பந்தம் ஒன்றை முன்னெடுத்த ஈரான் News Lankasri