ராஜகிரியவில் 300 புதிய வீடுகள்! அமைச்சரவை வழங்கியுள்ள ஒப்புதல்
ராஜகிரிய, ஒபேசேகரபுர, அருணோதய மாவத்தையில் 300 வீட்டு அலகுகளை நிர்மாணிக்கும் திட்டத்தை செயல்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ராஜகிரிய, ஒபேசேகரபுர, அருணோதய மாவத்தையில் 300 வீட்டு அலகுகளை நிர்மாணிக்கும் திட்டத்தை செயல்படுத்த 2020-03-04 அன்று நடைபெற்ற பொதுச் சபைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
200 மில்லியன் அமெரிக்க கடன் உதவி
இது ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியிடமிருந்து 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் உதவியின் கீழ் 4,074 வீட்டு அலகுகளை நிர்மாணிக்கும் திட்டத்தின் 06 துணைத் திட்டங்களில் ஒன்றாகும்.

இந்த திட்டத்தின் ஒப்பந்தக்காரரின் மோசமான செயல்திறன் காரணமாக, ஒப்பந்தம் இரத்து செய்யப்பட்டு, தேசிய ஏல முறையின் கீழ் மேற்படி திட்டத்தை மீண்டும் செயல்படுத்த பொருத்தமான ஒப்பந்தக்காரரைத் தேர்ந்தெடுக்க ஏலங்கள் கோரப்பட்டிருந்தன.
அதன்படி, சமர்ப்பிக்கப்பட்ட 06 விலைமனுக்கள் தொடர்பாக வழங்கப்பட்ட பரிந்துரையின் அடிப்படையில், ராஜகிரிய, ஒபேசேகரபுர, அருணோதய மாவத்தையில் 300 வீட்டு அலகுகளை நிர்மாணிக்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை தனியார் நிறுவனத்திற்கு வழங்குவதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
உலக அரசியலில் பதற்றம்: ட்ரம்பின் நகர்வு சர்வாதிகாரமா..! அ. யோதிலிங்கம் 22 மணி நேரம் முன்
பிக்பாஸ் டைட்டில் வின்னர் திவ்யா 6 வருடங்களுக்கு முன்பு எப்படி இருந்தார்? வைரலாகும் புகைப்படம் Manithan
நீண்ட வருடங்களுக்கு பிறகு வெளிவந்த நடிகை அசினின் புகைப்படம்... திருமண நாள் கொண்டாட்ட போட்டோ வைரல் Cineulagam