இலங்கையின் கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்ட 30 தமிழக கடற்றொழிலாளர்கள்
இலங்கையின் கடல் கொள்ளையர்கள் கடந்த இரண்டு நாட்களில், தமிழக கடற்றொழிலாளர்கள் மீது மீண்டும் வன்முறைத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தாக்குதல்களில் காயமடைந்த 17 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் கூறுகின்றன.
இந்த வன்முறைத் தாக்குதல்கள் இந்திய கடல் பகுதியிலேயே இடம்பெற்றுள்ளதாக தமிழக கடற்றொழிலாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
தாக்குதல்கள்
இதன்போது கடற்றொழிலாளர்களிடம் இருந்து சுமார் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான மீன்பிடி உபகரணங்கள் கவர்ந்து செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட கடற்றொழிலாளர்கள் மீதே இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இரும்பு கம்பிகள் மற்றும் கத்திகளால் இந்த தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனினும் இந்த தகவல் தொடர்பில் இலங்கையின் தரப்பில் இருந்து எவ்வித கருத்துக்களும் வெளியாகவில்லை.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் யாருக்கு வெற்றி..! யாருக்கு தோல்வி 17 மணி நேரம் முன்

மணிமேகலையை தாக்கி தான் ரக்ஷன் இப்படி பேசினாரா.. குக் வித் கோமாளி 6ல் என்ன கூறினார் பாருங்க Cineulagam
