கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் ஏற்பட்டுள்ள ஆபத்து - சுகாதார அமைச்சு எச்சரிக்கை
கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் ஆபத்தான திரிபடைந்த டெல்டா வைரஸ் பரவியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தப் பகுதியில் வாழும் மக்களில் நூற்றுக்கு 20, 30 வீதமானோருக்கு டெல்டா கொவிட் மாறுபாடு தொற்றியிருக்கலாம் என சுகாதார அமைச்சின் ஊடக பேச்சாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
கடந்த 15ஆம் திகதி 19 டெல்டா தொற்றாளர் 19 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில் அவர்களில் அதிகமானோர் கொழும்பு பிரதேசத்தை சேர்ந்தவர்களாகும்.
இந்த தொற்றாளர்கள் 19 பேருடன் சேர்த்து இலங்கையில் இதுவரையில் 38 பேர் டெல்டா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
அதற்கமைய இதுவரையில் டெல்டா தொற்றுக்குள்ளாகிய நபர்கள் காலி, மாத்தறை, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களாகும்.
டெல்டா தொற்றுக்குள்ளாகிய நிலையில் அடையாளம் காணப்பட்டவர்களை விடவும் அதிகமானோர் சமூத்தில் இருக்க கூடும்.
இதனால் உரிய சுகாதார முறையை பின்பற்றுமாறு பொது மக்களிடம் கேட்டுக்கொள்வதாக சுகாதார அமைச்சின் ஊடக பேச்சாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் மேலும் தெரிவித்துள்ளார்.

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam
