பொலன்னறுவையில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி 30 பேர் மருத்துவமனையில் அனுமதி
பொலன்னறுவை அருகே திம்புலாகல, குளவிக்கொட்டு காரணமாக பாடசாலையொன்றின் அதிபர் உட்பட சுமார் 30 பேர் மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று (04.06.2026) காலை நடைபெற்றுள்ளது.
மாணவர்களை விரைவாக மீட்டு அனுமதித்தனர்
திம்புலாகல, லீலாரத்ன விஜேசிங்க மகா வித்தியாலயத்தின் மாணவர்களுக்கான 'மாணவர் தலைவர்' பதவியேற்பு மற்றும் சின்னம் சூட்டும் விழா இன்று(04) காலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பாடசாலைக் கட்டடமொன்றின் உட்பகுதியில் சில குளவிக்கூடுகள் இருந்துள்ளதாகவும், அவை திடீரெனக் கலைந்து வந்து தாக்கியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து பாடசாலை அதிபரால் உடனடியாகப் பொலிஸாருக்கும், அரலகங்வில விசேட அதிரடிப்படையினருக்கும் (STF) தகவல் வழங்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, விசேட அதிரடிப்படையினரும் பொலிஸாரும் இணைந்து குளவிக்கொட்டுக்கு இலக்கான மாணவர்களை விரைவாக மீட்டு, அரலகங்வில மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
குளவிக்கொட்டுக்கு இலக்காகிய மாணவர்களைக் காப்பாற்ற முயன்ற, அரலகங்வில பொலிஸ் பயிற்சிக் கல்லூரியின் இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சீனாவால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்... பிரித்தானியா உட்பட ஐந்து நாடுகள் விடுத்த எச்சரிக்கை News Lankasri
குந்தவை சர்ச்சைக்கு பின்... முதல்வர் விஜய் - பார்திபனின் முதல் சந்திப்பு! படுவைரலாகும் புகைப்படங்கள் Manithan