வெள்ளத்தில் சிக்கிய 30 மில்லியன் ரூபா பெறுமதியான பொருளை மீட்ட கடற்படை
ஹங்வெல்ல பாலத்திற்கு கீழ் சிக்குண்டிருந்த நீர்பாசன திணைக்களத்திற்கு சொந்தமான நீர் அளவீட்டு மானி ஒன்றை கடற்படையினர் கண்டுபிடித்துள்ளனர்.
சுமார் 30 மில்லியன் ரூபா பெறுமதியான நீர் அளவீட்டு மானியே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
களனி ஆற்றின் நீரின் அளவு, நீரின் வேகம், நீரின் திசை என்பவற்றின் தரவுகளை சேகரிப்பதற்காக, இந்த GPS நீர் அளவீட்டு மானி நீர்பாசன திணைக்களத்தினால் பொருத்தப்பட்டிருந்தது.
சுழியோடிகளால் கருவி கண்டுபிடிப்பு
இந்த நிலையில், கடந்த சில தினங்களாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்குண்டு, இந்த நீர் அளவீட்டு மானி நீரில் அடித்துச் சென்றுள்ளது.
இதனையடுத்து, குறித்த GPS நீர் அளவீட்டு மானியை மீட்பதற்கு, நீர்பாசன திணைக்களம், கடற்படையின் உதவியை நாடியிருந்த நிலையில், கடற்படையின் சுழியோடிகள் கருவியை கண்டுபிடித்து நீர்பாசன திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |