கடந்த இரு வருடங்களில் வழங்கப்பட்டுள்ள 30 மில்லியன் சிவப்பு மின் பட்டியல்: கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு
மின்சாரக் கட்டணங்கள் தாமதமாக செலுத்தப்பட்டதன் காரணமாக 2022 மற்றும் 2024இற்கு இடைப்பட்ட காலத்தில் கிட்டத்தட்ட 30 மில்லியன் சிவப்பு மின் பட்டியல் வழங்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர (Kanchana Wiejesekera) தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் கெவிந்து குமாரதுங்கவினால் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மின் இணைப்புகள்
மேலும் தெரிவிக்கையில், “உரிய நேரத்தில் மின் கட்டணத்தை செலுத்தாததால் 1.3 மில்லியனுக்கும் அதிகமான பாவனையாளர்களின் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
மேலும், 126,000இற்கும் மேற்பட்ட நுகர்வோரின் கணக்குகள் மூடப்பட்டுள்ளதோடு, கிட்டத்தட்ட 1.9 மில்லியன் புதிய மின் இணைப்புகள் பெறப்பட்டுள்ளன.
எனினும், இலங்கையில் தற்போது 7.2 மில்லியனுக்கும் அதிகமான மின்சார பாவனையாளர்கள் இருப்பதாகவும்” அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பிரித்தானியாவின் தடை உணர்த்துவது..! 23 மணி நேரம் முன்

சிக்கந்தர் படுதோல்வி.. முருகதாஸை டார்ச்சர் செய்த சல்மான் கான்!! உண்மையை உடைத்த பத்திரிக்கையாளர் Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
