இலங்கைக்கு கடத்த இருந்த 30 கிலோ மூக்குப்பொடி மூட்டைகள் பறிமுதல்
தமிழகத்தின் மண்டபம் அருகே உள்ள வேதாளை கடற்கரையிலிருந்து இலங்கைக்குக் கள்ளத்தோணியில் கடத்த இருந்த 30 கிலோ மூக்குப் பொடி மூட்டைகள் மண்டபம் சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள வேதாளை குயவன் தோப்பு பகுதியிலிருந்து இலங்கைக்கு மூக்குப் பொடி மூட்டைகள் கடத்த இருப்பதாக ராமேஸ்வரம் சுங்கத்துறையினருக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்து சுங்கத்துறை அதிகாரிகளால் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது குறித்த பிரதேசத்தின் கடற்கரையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த நாட்டுப்படகு ஒன்றைச் சோதனை செய்ய முற்பட்டபோது கடத்தல் காரர்கள் இரண்டு மூட்டைகளை கடற்கரையில் தூக்கி வீசிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பொதிகள் இரண்டிலும் 100 அட்டைப்பெட்டிகளில் சுமார் 30 கிலோ மூக்குப்பொடிகள் காணப்பட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த கடத்தல்காரர்கள் தொடர்பாக விசாரணைகளைத் தொடர்ந்தும் முன்னெடுத்துள்ளனர்.







யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

இந்தியாவில் Audi A9 காரை வைத்துள்ள ஒரே பெண்! நீதா அம்பானியின் விலையுர்ந்த கார் கலெக்ஷன் இதோ News Lankasri
