கொழும்பில் மரக்கறிகளால் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள நத்தார் மரம் (Photo)
கொழும்பு காலிமுகத்திடலில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு அருகாமையில் சுமார் 30 அடி உயரமான மரக்கறி வகைகளிலான நத்தார் மரம் உருவாக்கப்பட்டுள்ளது.
மக்கள் மத்தியில் வீட்டுத் தோட்டம் மற்றும் விவசாய செய்கையை பிரபல்யப்படுத்தும் நோக்கில் இந்த நத்தார் மரம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த நத்தார் மரத்தில் சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட காய்கறி செடிகளைக் கொண்ட தொட்டிகள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மரக்கறி வகைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள நத்தார் மரம்
மரக்கறி வகைகள், கீரை வகைகள், மிளகாய் உள்ளிட்ட பல வர்ண தாவரங்களினால் இந்த நத்தார் மரம் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இந்த நத்தார் மரம் காட்சிப்படுத்தப்பட்டதன் பின்னர் இந்த மரக்கறி செடிகள் மக்கள் மத்தியில் பகிர்ந்தளிக்கப்பட உள்ளதாகவும், பொரளை பகுதி பாடசாலை ஒன்றுக்கு ஒரு தொகுதி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.







புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri

கங்குவா படத்திற்கு பின் சிறுத்தை சிவா இந்த ஹீரோவைத்தான் இயக்கப்போகிறாரா.. லேட்டஸ்ட் தகவல் Cineulagam

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam
