வத்தளையில் தண்ணீர்த் தொட்டிக்குள் விழுந்து 3 வயது குழந்தை பலி
தண்ணீர்த் தொட்டிக்குள் விழுந்து மூன்று வயது ஆண் குழந்தை உயிரிழந்துள்ளத சம்பவமொன்று கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ளது..
இந்த சம்பவம் கம்பஹா மாவட்டம், வத்தளைப் பிரதேசத்தில் நேற்று (04.08.2023) மாலை இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை திடீரெனக் காணாமல்போயுள்ளது.
பொலிஸார் விசாரணை

இதனை அறிந்த பெற்றோர் குழந்தையை தேடியபோது குறித்த குழந்தை நீர் நிரம்பிய தொட்டிக்குள் விழுந்து கிடந்துள்ளது.
இந்நிலையில் குழந்தையை பெற்றோர் உடனடியாக வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற போதிலும் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், ராகம வைத்தியசாலையில் குழந்தையின் சடலம் வைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri
சீனாவில் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து... லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றம் News Lankasri