வீடொன்றில் கைது செய்யப்பட்ட பெண் இராணுவத்தினர்
இராணுவ பணிக்கு சமூகமளிக்காமல் மத்தேகொடையில் உள்ள வீடொன்றில் தலைமறைவாகியிருந்த மூன்று பெண் இராணுவத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொக்காவில் மற்றும் சந்துன்புர இராணுவ முகாம்களில் கடமையாற்றும் குறித்த பெண் இராணுவ அதிகாரிகள், ஹசலக்க, தெனிபிட்டிய மற்றும் பொல்கசோவிட்ட ஆகிய பிரதேசங்களில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
மேலும், பொல்கசோவிட்டவை சேர்ந்த பெண் இராணுவ அதிகாரி விடுமுறையில் சென்றிருந்த நிலையில், மற்ற இருவரும் அவரைச் சந்திக்க சென்றுள்ளதுடன் பல நாட்களாக வீட்டிலேயே தங்கியிருந்துள்ளனர்.
பொலிஸாரிடம் முறைபாடு
இந்நிலையில், குறித்த வீட்டில் வசித்து வரும் நபர், இந்த பெண் இராணுவ அதிகாரிகள் இருப்பது தொடர்பில் 119 என்ற எண்ணின் மூலம் பொலிஸாரை தொடர்பு கொண்டு முறைபாடு செய்துள்ளார்.

இதனை தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், குறித்த இராணுவ வீராங்கனைகள் உண்மையிலேயே தங்கள் சேவையை விட்டு வெளியேறியது தெரியவந்துள்ளதுடன் மேலதிக விசாரணைக்காக அவர்கள் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan
நீங்க சூர்யாவா, ரஜினியா? போன் எடுக்க முடியாதா? - திமிராக பேசிய இயக்குனருக்கு விஷ்ணு விஷால் பதிலடி Cineulagam
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri