சட்டவிரோத மதுபானத்துடன் மூன்று சந்தேக நபர்கள் கைது
சட்டவிரோத மதுபானங்களுடன் மூன்று சந்தேக நபர்களை அம்பாறை தலைமையக பொலிஸ் நிலைய ஊழல் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
அம்பாறை தலைமையக பொலிஸ் நிலைய ஊழல் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அம்பாறை இங்கினியாகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்லனோய மற்றும் கெத்சிறிகம கிராமங்களில் இன்று(7.3.2026) நடத்தப்பட்ட சோதனைகளின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது 41,500 மில்லிலிட்டர் சட்டவிரோத மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளது.
சட்ட நடவடிக்கை
இந்தப் பகுதிகளில் ஒரு குழு சிறிது காலமாக சட்டவிரோத மதுபானங்களை விற்பனை செய்து வருவதாகவும், கிராமங்களில் பொதுமக்களுக்கு பெரும் தொந்தரவாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்தக் கிராமங்களில் உள்ள இளைஞர்களும் இந்த சட்டவிரோத மதுபானத்தை உட்கொள்ள தூண்டப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து அம்பாறை தலைமையக பொலிஸ் நிலைய ஊழல் தடுப்புப் பிரிவினர் இந்த சோதனைகளை மேற்கொண்டனர்.
கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களும் சட்டவிரோத மதுபானமும் சட்ட நடவடிக்கைகளுக்காக இங்கினியாகல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
ஈழத் தமிழர்களின் அரசியல் வெற்றிடமும் வெற்றிக்கான பாதையும் 23 மணி நேரம் முன்
உலகின் எந்த சக்தியாலும் கொல்ல முடியாத தளபதிகளில் ஒருவர்... மரணத் தண்டனையை நிறைவேற்றிய ஈரான் News Lankasri
எஞ்சிய ஆறு வெடிகுண்டுகள்... ஈரான் போருக்கு நடுவே ட்ரம்பிற்கு பறந்த அந்த அதிர்ச்சி தகவல் News Lankasri