மட்டக்களப்பு - வவுணதீவுப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மண் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது
மட்டக்களப்பு, மண்முனை மேற்கு பிரதேசத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவில் சட்டவிரோதமான முறையில் மண் அகழ்வில் ஈடுபட்ட மூன்று வாகனங்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுணதீவு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நிஷாந்த கப்புகாமியின் ஆலோசனைக்கமைய பொலிஸ் உத்தியோகத்தர்களால் நேற்று அரசடிச்சேனை, பாம்பர்சேனை பகுதியில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது
இதன்போது பெக்கோ ரக கனரக வாகனம் ஒன்றும், மண் ஏற்றிய நிலையில் இரண்டு உழவு இயந்திரங்களும், அதிலிருந்த மூன்று நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமான முறையில் உரிய அனுமதிப்பத்திரம் இல்லாமல் மண் அகழ்வில் ஈடுபட்ட போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவரையும், குறித்த வாகனங்களையும் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸ் பொறுப்பதிகாரி நிஷாந்த கப்புகாமி தெரிவித்துள்ளார்.
மயில் அனுப்பிய மெசேஜ், கடுப்பான செந்தில் மீனாவிற்கு கொடுத்த வார்னிங்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
ரஜினிகாந்த் முதல் தமிழக முதல்வர் ஸ்டாலின் வரை.. நடிகர் மீசை ராஜேந்திரன் வீட்டு திருமணம்.. வீடியோ இதோ Cineulagam
Khiladi Jodies: இலங்கை வீதியில் கருவாடு விற்ற இந்திய பிரபலங்கள்... சாப்பாடு இல்லாமல் அடைக்கப்பட்ட கொடுமை Manithan
அமெரிக்கா கனடாவின் கூட்டாளர் அல்ல... ரஷ்யாவைவிட மிகப்பெரிய அச்சுறுத்தல்: ஆய்வு முடிவுகள் News Lankasri