திருகோணமலையில் சட்டவிரோதமாக விடுதி நடத்தி வந்த மூவர் கைது
திருகோணமலை தம்பலகாமம்-பொலிஸ் பிரிவுக்கு கல்மெடியாவ பகுதியில் சட்டவிரோதமாக விடுதியொன்றினை நடாத்தி வந்த ஆண் ஒருவரையும் இரண்டு பெண்களையும் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த கைது சம்பவமானது நேற்று (02) மாலை இடம் பெற்றுள்ளது.
மேலதிக விசாரணைகள்
தம்பலகாமம் -கல்மெடியாவ பகுதியில் தேநீர் கடையொன்றினை நடாத்தி வருவதைப் போன்று சட்டவிரோதமாக விடுதி நடாத்தி வருவதாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து குறித்த தேநீர் கடையை சோதனையிட்ட போது தேநீர் கடைக்கு பின்னால் அரையொன்றில் தங்கியிருந்த இரண்டு பெண்களை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் கண்டி மற்றும் இரத்னபுரி பகுதிகளைச் சேர்ந்த 35 வயது உடையவர்கள் என தெரியவந்துள்ளது.
அத்தோடு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை கந்தளாய் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் - காலை திருவிழா





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 7 மணி நேரம் முன்

ரஷ்யாவின் கச்சா எண்ணெயில் லாபம் பார்க்கும் இந்தியா! அமெரிக்கா விடுத்த அடுத்த எச்சரிக்கை News Lankasri
