பதிலளிக்க வழங்கப்பட்ட 3 நிமிடம் - இலங்கை அதிருப்தி
ஜெனிவாவில் இலங்கை மீதான பிரேரணைக்குப் பதிலளிப்பதற்காக மூன்று நிமிடங்களே வழங்கப்பட்டுள்ளன எனவும்,
அது தொடர்பான தமது அதிருப்தியை ஐ.நா. மனித உரிமைகள் சபைக்கு அறிவித்துள்ளோம் எனவும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை மீதான விவாதம் நேற்றும், இன்றும் நடைபெறுகின்றது. அதன்பின்னர் இன்று இலங்கை மீதான பிரேரணை மீது வாக்கெடுப்பும் நடைபெறுகின்றது.
இந்தநிலையில், அவர் மேற்கண்டவாறு கூறினார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், இலங்கை மீதான பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை, ஆதாரமற்றவை.
இதை அதிகமான நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன. இலங்கை மீதான முதலாவது வரைவில் குறிப்பிடப்பட்டிருந்த பல விடயங்களும், இறுதியாக முன்வைக்கப்பட்ட வரைபில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
பிரித்தானியாவின் தலைமையில் இந்தப் பிரேரணை கொண்டுவரப்பட்டிருந்தாலும், தகவல்களின் ஆதாரமற்ற தன்மை காரணமாக பிரிட்டனுக்குள்ளேயே இந்தப் பிரேரணைக்கு எதிர்ப்பு மேலெழுந்துள்ளது என்றார்.
தாலி கட்டுறேனு சொல்லி 1000 முத்தங்கள்.. பிக்பாஸ் முத்துக்குமரன் மீது பெண் பரபரப்பு குற்றச்சாட்டு! Manithan
தேர்தல் களத்தில் கடும் நெருக்கடி... ஈரான் மீது மீண்டும் தாக்குதலுக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri