கனடாவில் கோர விபத்து: சம்பவ இடத்திலேயே 3 பேர் பலி
கனடாவில் அதிவேகமாக பயணம் செய்த வாகனம் ஒன்று விபத்துக்கு உள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
டெஸ்லா ரக வாகனம் ஒன்றில் பயணம் செய்த மூன்று பேரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.
அதிவேகமாக சென்ற வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் குடை சாய்ந்ததன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
மூவர் உயிரிழப்பு
இந்த விபத்து சம்பவத்தில் இரண்டு ஆண்களும், ஒரு பெண்ணும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
வாகனத்தில் ஆறு பேர் பயணித்துள்ளதாகவும், மேலும் இரண்டு ஆண்கள் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த வாகனத்தில் பயணம் செய்த மற்றுமொரு பெண் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவருக்கு உயிராபத்து கிடையாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
விரிவான விசாரணை
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
எட்மோன்டன் பகுதியில் எல்லர்லைய் விதிக்கு அருகாமையில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் பற்றிய ஆள் அடையாள விபரங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |