வவுனியாவில் முச்சக்கரவண்டி- மோட்டர் சைக்கிள் மோதி விபத்து: இருவர் படுகாயம்(Photos)
வவுனியாவில் முச்சக்கர வண்டி - மோட்டர் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த இருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா புகையிரத நிலைய வீதியில் இன்று (25.12) மதியம் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, புகையிரத நிலைய வீதியில் உள்ள தனியார் கல்வி நிலையம் முன்பாக மாணவி ஒருவரை இறக்கி விட்டு வவுனியா நகரை நோக்கி செல்வதற்காக வீதியின் குறுக்கே முச்சக்கர வண்டி ஒன்று திரும்ப முற்பட்ட போது குருமன்காடு பகுதியிலிருந்து புகையிரத நிலைய வீதி ஊடாக வந்த மோட்டர் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது.
குறித்த விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி மற்றும் மோட்டர் சைக்கிள் சாரதி என இருவரும் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்த இருவரும் நோயாளர் காவு வண்டி மூலம் வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில்
வவுனியா போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.






சொகுசு கார் முதல் பல ஆயிரம் டொலர் சம்பளம் வரை! போப் பிரான்சிஸ் செய்த நெகிழ்ச்சி செயல்கள் News Lankasri

மலிவான வட்டி விகிதத்தில் ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கும் இந்திய அரசு.., எந்தெந்த வங்கிகள் தெரியுமா? News Lankasri

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri
